The Largest Tamil Christian's Global Network

 

Coming Soon!

 

Coming Soon!

 

Coming Soon!

  • Welcome to TamilChristian.com
  • Freely you have received, freely give. Matthew 10:8
  • ,ytrkha;g; ngw;wPh;fs;> ,ytrkha;f; nfhLq;fs;. kj;NjA 10:8


பரிசுத்த ஸ்தலம்

கர்த்தருக்குள் பிரியமானவர்களே !

இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தத்தினால் நமக்கு பாதை காட்டப்பட்டுள்ளது. நம்மை மீட்கும் பொருட்டு தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார்.

இயேசு: 'நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்' யோவான் 14:6

நமக்கு பாதை காட்டப்பட்டிருக்கிறது அதற்குள் பிரவேசிப்பதற்கான பிரவேசமும் கொடுக்கப்பட்டிருக்கிறது, எல்லாவற்றையும் தந்து விட்டார் இலவசம். ஆனால் நாம் ஒன்றை மாத்திரம் கொண்டு அதற்குள் பிரவேசிக்கவேண்டும்,

அதுதான் விசுவாசத்தின் பூரண நிச்சயம்.

'தேவன்,தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு,அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.' யோவான் 3:16

இயேசுகிறிஸ்துவே நமக்கு பாலமாகவும், மாதிரியாகவும் இருக்கின்றார். அவரை நமது உள்ளத்தில் விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவர் காட்டும் பாதை செல்வோமானால் நமது பாதை ஜீவபாதையை காணக்கூடியதாக இருக்கும். இந்த பாதையில் ஒளியுண்டு, எவ்வளவேனும் இருள் இல்லை. முழுமையான உண்மையுள்ள விசுவாசமும், முழுமனதோடு தேவனுக்கு பயப்படுகிற பயமும் வேண்டும்.

பரிசுத்த ஸ்தலத்திற்கு நாம் பிரவேசிக்க எவ்விதத்திலும் தகுதி அற்றவர்கள் பரிசுத்தஸ்தலம் கர்த்தருடைய சந்நிதி அது பரிசுத்தமானது. பாவமே இல்லாத இடத்திற்கு பாவிகளாகிய நம்மை பிரவேசிக்கும் சிலாக்கியத்தை அவர் நமக்கு தந்துள்ளார். எப்படி என்றால், இயேசுகிறிஸ்துவின் சரீரம் நமக்காகப் பலியிடப்பட்டு அவரின் பரிசுத்த இரத்தம் நமது பாவங்களுக்காக சிந்தப்பட்டது.

'கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம்; பலியிடப்பட்டு,....... வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டு பண்ணினார்.'எபி.9:28,12

இப்போ நாம் அந்த சிலாக்கியத்தை பெற்றிருக்கிறோம். நமக்காக மரித்தவரே இன்று நமக்காக வாழ்கிறவராகவும் இருக்கிறார். அவரே நம்மை எல்லாம் அந்த பரிசுத்தஸ்தலத்திற்கு அழைக்கின்றார் வாருங்கள் நானே பிரதான ஆசாரியன் நாம் எல்லோரும் பரிசுத்தமாக தேவனை ஆராதிப்போம் என்று,

'உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என்பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்,ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்வேன். நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள்,வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்' யோவான் 14:1-4

இந்த ஸ்தலத்தில் கிருபாசனம் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த கிருபாசனத்தண்டையில் (கிருபையின் ஆசனம்) இருப்பவர் நம்மை அவரண்டையில் சேர அழைக்கின்றார். 'ஆதலால்,நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்'எபி.4:16

இந்த சிலாக்கியம் முன்பு வெளிப்படவில்லை நாம் எல்லோரும் எவ்வளவு பாக்கியமானவர்கள் 'பரிசுத்த ஸ்தலத்திற்குப் போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லை என்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்துகிறார்'எபி. 9:8

காரணம் அதற்கான பலி செலுத்தப்பட்டாலே அன்றி அதற்குள் பிரவேசிக்க முடியாது. இந்த இடத்தை திரைச் சீலையானது தடுக்கின்றது யாத்;.26:33 அப்படி மீறி பிரவேசிப்பவனுடைய நிலை லேவி; 10:1-2

கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்,காரணம் பாவம் இல்லாத பரிசுத்த இடத்தில் எப்படி பாவ மனுசன் பிரவேசிக்கமுடியும்? ஆனால் இன்று அந்த திரைச் சீலை கிழிந்தது. மத்;.27:51

'அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினால்......எபி. 10:20

நாம் அதற்குள் பிரவேசிப்பதற்கான கிருபையை பெற்றிருக்கிறோம் நமக்காக இருக்கும் பிரதான ஆசாரியர் என்றென்னும் ஜீவிப்பவராக இருக்கிறார். உண்மையுள்ள இருதயம், விசுவாசத்தின் பூரண நிச்சயம், இருதயத்தில் சுத்த மனச்சாட்சி ஆக மொத்தத்தில் நாம் சுத்த ஜலத்தினால் கழுவப்பட்டவர்களாகவும் அதனால் நாம் அபிசேகம் பண்ணப்பட்டவர்களாகவும் அவரது கட்டளைகளால் உடன்படிக்கைப் பெட்டியாகிய நமது உள்ளத்தை நிரப்பி அவரண்டையிலே சேரக்கடவோம்.

பழைய ஏற்பாட்டிலே பிரதான ஆசாரியன் வருடத்தில் ஒரு தடவை மாத்திரம் இங்கே பிரவேசிக்க முடியும், ஆனால் நாமோ எப்பொழுது வேண்டுமானாலும் கர்த்தருடைய சந்நிதியில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை இன்று பெற்றிருக்கிறோம். இதற்கு இயேசுகிறிஸ்துவே காரணர் ஆவார். நாம் எப்பொழுதும் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை ஏன் தேவன் நமக்குத் தந்தார்? எப்பொழுதும் பிரவேசிக்கலாம் என்றால் அதற்குள் பிரவேசிக்கும் போதெல்லாம் நம்மை நாம் சுத்திகரித்து வசனம் 22ன்படி செல்ல வேண்டும். அவர் நம்மை அந்த இடத்தில் எப்பொழுதும் வர அனுமதி தந்திருக்கின்றார் என்றால் அதன் அர்த்தம் எப்பொழுதும் நாம் உண்மையுள்ளவர்களாகவும் பரிசுத்தமுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதே. (அழைத்தவர் உண்மையுள்ளவர்) 'வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே'

' வருகிறவர் இன்னுங் கொஞ்சக் காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.' எபி.10:37

பிரியமானவர்களே:

இயேசு நம்முடைய பாவங்களை சுமந்து நாம் நிற்கவேண்டிய, நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய எல்லா தண்டனைகளையும் அவரே ஏற்றுக் கொண்டார். அவரை நாம் ஏற்றுக் கொள்ளும் போது நமது உள்ளம் சமாதானத்தை பெற்றுக் கொள்ளும்.

ஆமேன், கர்த்தராகிய இயேசுவே வாரும்.

Light of the World

Light of the WorldLight of the World
I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life. Jn.8:12
Add ChurchAdd Church
Churches in your area, Add a Church Location or Search for one near you.