Sunday, June 24, 2018


The Largest Tamil Christian's Global Network



ஒரு பரீட்சை

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!

சில பரீட்சைகள் இதனை ஆராய்ந்து பார்த்தால் நாம் தேவனுடன் எப்படி ஐக்கியம் கொண்டு இருக்கிறோம் என்பதை தெளிவாக்கிக் கொள்ளலாம்.

நம்முடைய ஐக்கியம் தேவனுடன் எப்படிப்பட்டதாக இருக்கிறது? 1யோ. 1:3-4

நம்முடைய கீழ்ப்படிதல் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்? 1யோ. 2:3-5

நம்முடைய நடத்தை என்ன விதமாக உண்டென்பதை பார்க்கவேணும்,தேவனுக்கேற்ற மாதிரி உள்ளதா? உலகப்பிரகாரமாக உள்ளதா? 1யோ. 2:15

நமது வாழ்க்கை நடைமுறை பாவம் இல்லாததாக காணப்படுகிறதா? 1யோ. 3:5

நம்முடைய அன்பு எப்படிப்பட்டது? நாம் விசுவாசிகளான எல்லோரிடத்திலும் அன்பு காட்டுகின்றோமா? 1யோ. 3:14

நாம் தேவனிடம் செய்யும் வேண்டுதலுக்கு பதில் கிடைக்கின்றதா? தேவன் பதில் செய்கின்றாரா என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும் 1யோ.5:14-1

நமக்குள் இருக்கும் தேவனின் ஆவியானவர் சாட்சி கொடுப்பதற்கான சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்கின்றோமா? ரோம.8:16 1யோ.4:13

நம்மிடம் பகுத்தறியும் ஆவி அதாவது இன்று உலகத்தில் நடக்கும் பலவிதமான செய்கைகளினால் மனம் குழம்பி விடாமல் அந்த ஆவிகளை அறிந்து கொள்ள வேண்டும். 1யோ. 4:1

மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசுவானவரே கிறிஸ்து என்கிற விசுவாசமும் கிறிஸ்துவினுடைய உபதேசத்திலும் நாம் உறுதியாக நிலைத்து நிற்கிறோமா? 1யோ. 5:1

நாம் துன்பப்படுகிறோமா? அதாவது தேவனுடைய வார்த்தையில் நிலைத்து அதன்படி செய்வதாலும் நடப்பதாலும் உலகத்தால் பல துன்பங்கள் வேதனைகள் பலரால் நிந்திக்கப்படும்படியான சம்பவங்கள் உண்டா? 1பேதுரு 4:13-17 1யோ.2:18-19

அவருடைய வருகையில் நாம் எப்படி இருக்கவேண்டும்? என்னவிதமாக இருந்தால் நாம் அவரை அவருடைய வருகையில் சந்திக்க முடியும்? 1யோ. 3:2-3

எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். அப்.10:35

கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமேன் தேவன் தாமே உங்களனைவரயும் ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.

ஆமென்.கர்த்தராகிய இயேசுவே வாரும்.

Light of the World

Light of the WorldLight of the World
I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life. Jn.8:12
Add ChurchAdd Church
Churches in your area, Add a Church Location or Search for one near you.