The Largest Tamil Christian's Global Network

 

Coming Soon!

 

Coming Soon!

 

Coming Soon!

  • Welcome to TamilChristian.com
  • Freely you have received, freely give. Matthew 10:8
  • ,ytrkha;g; ngw;wPh;fs;> ,ytrkha;f; nfhLq;fs;. kj;NjA 10:8


நீ என்னுடையவன் (ள்)

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!

உன்னை என்னிடமாக மீட்டுக் கொள்ளும் பொருட்டு உனக்காக எல்லாவற்றையும் கொடுத்து உன்னை மீட்டுக் கொண்டேன் உனக்காக எதை கொடுக்க வேண்டுமோ எல்லாவற்றையும் கொடுத்தேன். அதுவும் போதாததாக இருந்தது காரணம் உன்னுடைய பாவம் அதிகம் அதனால் அதிகம் கொடுக்க வேண்டியதாக இருந்தது அதனால் உன்னை மீட்கும் பொருட்டு என்னையே நான் கொடுத்து உன்னை மீட்டுக் கொண்டேன்

காரணம் எனது ஜீவனை கொடுக்கவும் எடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. எவருக்கும் கொடுக்காத என் நாமத்தை நான் உனக்குத் தரித்தேன் ஆதலால் நீ என்னுடையவன்(வள்) நான் இதை உனக்குச் செய்து நானே மெய்யான ஜீவனுள்ள தேவன் என்றும், நானே உலக இரட்சகர் என்றும் என்னை உனக்கு வெளிப்படுத்தினேன்

இப்போ நீ என்னுடையவன்(வள்) என் நாமம் உனக்குத் தரிப்பிக்கப்பட்டிருக்கிறது இதற்கு சாட்சியாக எனது பரிசுத்த நாமத்தை அசுசிப்படுத்தாத சாட்சியாக சர்வமும் என்னைக் கண்டு கொள்ளும் ஒரு சாட்சியாக வாழ்கின்றாயா?

எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். அப்.10:35

கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக.

ஆமேன் தேவன் தாமே உங்களனைவரயும் ஆசீர்வதித்து வழி நடத்துவாராக. ஆமென்.கர்த்தராகிய இயேசுவே வாரும்.

Light of the World

Light of the WorldLight of the World
I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life. Jn.8:12
Add ChurchAdd Church
Churches in your area, Add a Church Location or Search for one near you.