The Largest Tamil Christian's Global Network

 

Coming Soon!

 

Coming Soon!

 

Coming Soon!

  • Welcome to TamilChristian.com
  • Freely you have received, freely give. Matthew 10:8
  • ,ytrkha;g; ngw;wPh;fs;> ,ytrkha;f; nfhLq;fs;. kj;NjA 10:8


நான் பரிசுத்தர்

நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். 1பேதுரு1:16

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவின் அன்பு நிறைந்த நாமத்தினால்அனைவரையும் வாழ்த்துகிறேன்.

இஸ்ரவேல் மக்கள் ஏன் பரிசுத்த தேவனை விட்டு அந்நிய தேவர்களை நோக்கி ஓடினார்கள்? தங்களால் பரிசுத்தமாக ஜீவிக்க முடியாத காரணத்தால், பரிசுத்தரை சேவிக்கும் போது பரிசுத்தமாக தொழுது கொள்ளவேண்டும் தெய்வமல்லாததை தெய்வமாக்கி அவைகளை தொழுது கொள்ளும்போது எப்படியும் வாழலாம்தானே, அவைகள் எப்படியோ அப்படியே அவைகளை தொழுது கொள்ளுபவர்களும் இருப்பார்கள்.

இன்றும் பரிசுத்தமான ஒரே தெய்வமான கர்த்தரை தொழுது கொள்ளாமல் அவரிடம் வராமல் இருப்பவர்களும், அவரிடம் வந்தும் பின்பு பின்வாங்குவதற்கும் காரணம் அவர்களால் பரிசுத்த ஜீவியம் ஜீவிக்க முடியாததனால், உலக இச்சைக்குட்பட்டு தங்கள் ஆத்தமாக்களை கெடுத்து தங்கள் இச்சைப்படி வாழ்கிறார்களே தவிர தேவ சித்தத்தின்படி வாழ்பவர்கள் யார்? வானத்தையும் பூமியையும் அதாவது சர்வத்தையும் உண்டாக்கினவர் சொன்னார்:

நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தமாயிருங்கள் (லேவி.11:45 1பேதுரு 1:15,16)

என்று, நம்மை நம்மாலே பரிசுத்தமாக்க முடியாது நம்மை பரிசுத்தமாக்குபவர் சர்வவல்லவரான பரிசுத்தரே அதற்கு நம்மை முற்றுமாக அர்ப்பணித்தாலே அன்றி அந்த சுத்தம் நடைபெறாது. அழுக்கு ஒட்டிக் கொண்டே இருக்கும். இன்று இந்த உலகில் தங்களைத் தாங்களே (பரி)சுத்தம் செய்து கொள்பவர்கள் அநேகர் எதைக் கொண்டு இவர்கள் தங்களை (பரி)சுத்தம் செய்கிறார்கள் என்றால் தங்கள் மனதில் தங்கள் பாவங்கள் கண்டிக்கப்படாதபடி யார் அல்லது எது உண்டோ அதை வைத்து தங்களின் பாவங்களை மூடி மறைக்கிறார்களே தவிர அது பரிசுத்தம் அல்ல.

பரிசுத்தமாக இருப்பவரே அந்த ஒரே மெய்யான தேவனே, அவரின் ஊடாக மாத்திரமே நாம் மெய்யான பரிசுத்தத்தை பெற முடியும். அவர் ஒருவரே பரிசுத்தர் என்றால் மற்றவைகள் எல்லாம் பரிசுத்தம் அற்றவைகள் என்றுதான் பொருள், அப்படி இருக்கும் போது எப்படி அவர்கள் மெய்யான பரிசுத்தத்தை பரிசுத்தம் அல்லாதவைகளாலே பெற முடியும்? இருளை ஒளி என்று நம்பிச் செல்லும் அளவுக்கு எத்தனை குருடர்கள்?

இவர்கள் ஒளியைக் கண்டு இது ஒளி என்று கூறாததற்கு முதல் காரணம் ஒளி தம்மிடத்தில் வந்து விட்டால் தமது வாழ்க்கையில் மறைந்து இருப்பவைகள் எல்லாம் வெளியரங்கமாகும் என்பதே,

'ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுசருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்- கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே.......... பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு,ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.'யோவான்3:19,20

என்னதான் மனிதன் அவன் திறமையினாலும்,மாயையான காரியத்தினாலும் தன்னை சுத்திகரிக்கமுடியாது. அவர் ஒருவரே பரிசுத்தர் அந்த பரிசுத்தரின் பரிசுத்த இரத்தம், அவர் வாயின் பரிசுத்த வார்த்தை, அவருடைய பரிசுத்தஆவி இதை விட நாம் எதைச் செய்தாலும் அவைகளால் பரிசுத்தத்தை பெற முடியாது.

பரிசுத்த இரத்தம்;

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். 1யோவான் 1:7

பரிசுத்த ஆவி:

.....கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும்,நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்,நீதிமான்களாக்கப்பட்டீர்கள். 1கொரிந்.6:11

பரிசுத்த வார்த்தை:

நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். யோவான் 15:3

நாம் அவரை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றாலே நமக்கு பரிசுத்தம் தேவை. ஆதலால் பிரியமானவர்களே! 'நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்' பிலி.1:11

நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். 1தெச.4:3,7

எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். அப்.10:35

சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக.உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும் போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர்,அவர் அப்படியே செய்வார். 1தெசலோனி.5:23,24

ஆமேன், கர்த்தராகிய இயேசுவே,வாரும்.

Light of the World

Light of the WorldLight of the World
I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life. Jn.8:12
Add ChurchAdd Church
Churches in your area, Add a Church Location or Search for one near you.