The Largest Tamil Christian's Global Network

 

Coming Soon!

 

Coming Soon!

 

Coming Soon!

  • Welcome to TamilChristian.com
  • Freely you have received, freely give. Matthew 10:8
  • ,ytrkha;g; ngw;wPh;fs;> ,ytrkha;f; nfhLq;fs;. kj;NjA 10:8


நாம் ஏன் கடவுளைத் தேடுகிறோம் ?

எமக்கு தேவையானவைகளைபெற்றுக்கொள்வதற்காகவா? நமக்கும் ஒரு கடவுள் தேவைஎன்பதற்காகவா?

மனிதர்கள் எல்லோரும் பாவிகள்,பாவத்தில்வாழும் மாந்தர்கள் எல்லோரும் எப்படி பரிசுத்தமான கடவுளைதேடமுடியும்? அப்படியே தேடினாலும் எமக்கு பதில்கொடுக்கக்கூடிய கடவுள் யார்? அவர் எப்படி நமக்கு பதில் கொடுக்கிறார்? என்பதை சிந்தித்துப்பார்க்கின்றநரா? அப்படி எல்லோரும் சிந்திப்பவர்களாகயிருந்தால் எல்லாக்கடவுளும் ஒன்று எந்த மதமும் ஒன்றுதான் என்று கூறுகின்றனர்.

ஒன்று என்று சொல்வதில் அர்த்தம் இல்லாமலில்லை ஒன்று என்பது ஒன்றுதான்.ஆனால் எல்லாக்கடவுள், எல்லாமதம் இதுதான் இன்று குழப்பமாக உள்ளது. நமக்குதெரிந்தவரையில் எத்தனை கடவுள் உண்டு? யாரிடம்கேட்டாலும் ஒரு தெய்வம் உண்டு என்று ஒத்துகொள்கின்றனர். சரி ஒரேதெய்வம் ஒரேசக்தி(வல்லமை) உண்டு என்றால் ஏன்அதை எவராலும் கண்டுகொள்ளமுடியாமலிருக்கிறது? அல்லது அந்தஒரேதெய்வம் மனிதன்தன்னைத்தேடி கண்டுபிடிக்கக்கூடாது என்று ஒளித்துக்கொண்டுவிட்டதா? இல்லவேயில்லை.எல்லோரும் ஒத்துக்கொள்கிறபடியே அந்த ஒரேதெய்வமானது மனிதன் தன்னைக்கண்டுகொள்ளவேண்டும் என்று தன்னை இந்தஉலகத்தில்வெளிப்படித்தியது,

ஆனால்மனிதனோ அந்ததெய்வத்தைதள்ளிவிட்டு தான்ஒளிந்துகொண்டான் எதற்குள் ஒளிந்து கொண்டான் என்றால், தனக்கு மனதில்தோன்றும் விதமாகதெய்வத்தைக்காணவிரும்புகிறான் அதற்கு ஏற்றவிதமாக அவனதுமனதில்வரும் கற்பனையைத்தான் தெய்வமாக சுருபமாக்குகிறான் அதை செய்து அதற்கு தன் மனதைக்கொடுத்து அதற்குள் ஒளிந்துகொள்கிறான.

அடுத்ததாக இன்று உலகத்திலே பொய்யானஅற்புதங்கள்;, அதிசயங்கள் அளவில்லாமல் நடக்கின்றது,இதுவும் மனிதனுக்கு மனதுக்கு பிடித்தமானதாகயிருப்பதால் இதைச்செய்பவர்களையும் தெய்வமாக்கி அதற்குள்ளும் ஒளிந்துகொள்கிறான். இவ்வளவு எல்லாவற்றையும் மனிதன் தான் நினைத்தவிதமாக அவனுடைய கடவுளுக்குசெய்தாலும் அந்தக்கடவுள்மார்கள் மனிதனுக்கு என்ன செய்கின்றனர்? பாவத்தில்வாழும் மனிதனுக்கு பாவத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு ஏதாவது விமோசனம் பெற அந்த கடவுள்மார்கள் கருணை புரிகின்றனரா? தெயவம் என்றால் இதற்கான அர்த்தம் எப்படிப்பட்டது ?இதை அறியாமல் எல்லாம் தெய்வம் என்றால் அந்த தெய்வத்தின் தன்மை என்ன?

தெய்வம் என்றாலே பரிசுத்தர்,சர்வவல்லவர்,ஆதியும்அந்தமும்இல்லாதவர்,வானத்தையும்பூமியையும் உண்டாக்கி அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவர். இப்படிப்பட்ட தெய்வம் எல்லாவற்றையும் தன்னுடைய வல்லமையால் உண்டாக்கிவிட்டு மனிதனிடம் தாம் ஒன்றை எதிர்பார்த்து தனக்கு ஒரு ஆலயம் கட்டவேண்டும் அதிலே நான் குடியிருக்கவேணும் என்று எண்ணுவாரோ?

'உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?

1கொரி. 6:19

ஆமேன், கர்த்தராகிய இயேசுவே வாரும்.

Light of the World

Light of the WorldLight of the World
I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life. Jn.8:12
Add ChurchAdd Church
Churches in your area, Add a Church Location or Search for one near you.