The Largest Tamil Christian's Global Network

என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்?

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!

ஒரு மனிதனுடைய ஆத்துமா அதற்குதேவையான உணவை பெற்றுக்கொள்ளாமல் இருக்கும்போது அது கொஞ்சம்கொஞ்சமாக மரணமடைகிறது, தேவனுடைய வார்த்தையானது அந்த ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது.

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. சங்.19:7

நம்முடைய சரீரத்துக்கு தேவையானவைகளை கொடுத்து போஷித்து காத்து கொள்கிறது போல அதற்கு மேலான ஆத்துமாவை போஷித்து காத்துக்கொள்ளவேண்டும். சரீரமோ அழிவுள்ளது, ஆத்துமாவோ நித்தியமானது. சரீரத்திற்கு தேவையானவைகளை அது வாஞ்சிக்கிறது போல ஆத்துமாவும் தன்னுடைய உணவிற்காக வாஞ்சிக்கும். யோபு தான் இருந்த அந்த நிலையிலும் தன்னுடைய சரீர தேவையிலும் விடதன் ஆத்தும தேவைகளை அதிக ஆகாரமாக விரும்பியதை காணலாம்;

அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப்பார்க்கிலும் அதிகமாய் காத்துக்கொண்டேன். யோபு 23.12.

இந்த உணவை நாம் பெற்று கொள்வதற்கு தேவன் அண்டையில் வந்து சேரும்போது அந்த ஆவிக்குரிய உணவினாலே தேவன் நமது ஆத்துமாவை போஷித்துக் காத்துக்கொள்ளுவார். ஆவியே உயிர்ப்பிக்கிறது ஆவிக்கேற்ற உணவாகிய தேவ வசனத்தை உட்கொள்ளும் போதும், தியானம் செய்யும்போதும் அதற்கு கீழ்ப்படிந்து செயற்படும்போதும் அந்த உணவு நமக்கு பலன் தருகிறது. ஏனோக்கும், நோவாவும் இந்த உணவால் பெரிதும் போஷிக்கப்பட்டு தேவனோடு சஞ்சரிக்கப்பட்டவர்களானதால் அந்த ஆத்துமாவை தேவன் அழிவுக்குட்படுத்தாமல் காத்துக்கொண்டார்.

எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள் பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும். எசேக்.18;:20

இன்று இந்த உலகில் ஆத்துமாவிற்கு தேவையான உணவு மிகவும் பற்றாக்குறையாக இருக்கிறது ஏன் என்றால் வேதவசனத்தை ஆவிக்கேற்றபடி எடுத்து விளக்கம் கொடுப்பவர்கள் மிகவும் குறைவு அநேகர் வேதவசனத்தை உலகநடப்பின்படி மொழிபெயர்த்து கூறிவிடுவதைகாணலாம். இதனால் ஆத்துமா தன்னுடைய உணவை தேடி அங்கும் இங்கும் அலைகிறதை காணலாம். ஆவிக்கேற்ற உணவு மிகவும் பற்றாக்குறையாக உள்ளது.இதனால் ஆத்துமா உலகத்தின் மேல் மோகம் கொள்கிறது, இதனால் ஆத்துமாவில் பலவிதமான குழப்பம் அமைதியின்மை உருவாகிறது.

ஆமோஸ் 8;:11- 12ல்; சொல்லப்பட்ட கர்த்தருடைய வசனம்கேட்கக்கிடைக்காதபஞ்சம் இன்று உலகிலே இருக்கிறது. ஆனால் என்னதான் பஞ்சம் வந்தாலும் நம்முடைய ஆத்துமா தேவனையே நம்பி அவரை சார்ந்து இருக்குமானால் அந்த ஆத்துமா பசியினால் வாடுவதை தேவன் அனுமதிக்கமாட்டார்

கர்த்தர் நீதிமான்களை பசியினால் வருந்தவிடார். நீதி..10.3

அவர் உன்னை எல்லாதீங்குக்கும் விலக்கிகாப்பார் அவர் உன் ஆத்துமாவை காப்பார். சங்.121.7

என்னதான் தீங்கானாலும் அல்லது உன்னுடைய ஆத்துமா பலவீனப்படும்படியான சந்தர்ப்பம் உண்டாகும் போது தேவனை நோக்கி வேண்டிக்கொள் அவர் உன் ஆத்துமாவைக்காப்பார்.

இயேசுகிறிஸ்துவை மாதிரியாக தேவன் நம் எல்லோருக்கும் தந்தருளினார். அவருடைய சிலுவை மரண வேளை சமீபித்தபோது பரிசுத்தமானவர் பாவிகளின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படபோகிறது அதை அவர் நினைக்கும்போது அவர் ஆத்துமா கலங்குகிறது ஆனால் அவர் தன்னை அந்த வேளையாகிய சிலுவை மரணத்தில் இருந்து நீக்கிவிடும்படி வேண்டிக்கொள்ளாமல் பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து வேண்டிக்கொள்கிறார். ஒரு மிருகத்தை பலிக்குகொண்டு செல்லும்போது அந்த மிருகத்திற்கு தான் பலிக்காக போகிறேன் என்று தெரியாது,ஆனால் இயேசுவுக்குத்தெரியும் தான் எப்படி பாடுகளின் ஊடாக பலியாகப்போகிறேன் என்று அதனால் அவரின் ஆத்துமா மிகவும் வியாகூலப்படவும்,திகிலடையவும் தொடங்கிற்று. அவருடைய ஆத்துமாபடும் துக்கத்தை ஒருகணம் நினைத்துப்பாருங்கள்! அப்படி இருந்தும் அவர் பிதா தனக்கு ஒப்புக்கொடுத்த பிதாவின்சித்தத்தை நிறைவேற்றுவதற்கு தன்னைத்தானே தாழ்த்தி சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல் அவர் தம்முடைய வாயைத்திறவாமல் தன்னை ஒப்புக்கொடுத்தார்.தேவன் அருளிய தேவஆவி அவரை பரிபூரணமாக அபிஷேகித்து இருந்தபடியால் அவருடையஆத்துமாபெலப்பட்டு தேவசமாதானத்துடன் சிலுவையின்மேல் வெற்றி சிறந்து சாத்தானை தோற்கடித்தார். அதனால் அவர் மகிமையினாலும்,கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதை காணலாம். எபி.2; .9

ஆத்துமா துக்கம்கொண்டிருக்கும் போது தேவனை நோக்கி வேண்டிக்கொள்,வேதவசனத்தில் நிலைத்திரு அந்தவசனங்களை தியானத்திற்கு எடுத்துக்கொள்.தியானத்தின்மூலம் தேவன் உன்னுடன் உரையாடுவார்;.

நாம் ஒரு உணவை உட்கொள்ளும்போது அந்த உணவை கையில் எடுத்து வாயில் போட்டு விழுங்கி விடுவதில்லை. அதை ருசித்து அரைத்து சாப்பிடுகிறோம் பின்பு அது குடலில்சென்று ஜீரணவேலைசெய்து உடலுக்கு பெலத்தைக்கொடுக்கிறது. அதேபோல் தேவவார்த்தையானது நம்முடைய ஆத்துமாவின் உணவாகயிருக்கிறபடியால் அதை ருசித்து உட்கொள்ளுதல் வேண்டும். அல்லாமல் அதை வாசித்து மூடிவிடுவதனால் அந்தவசனம் எப்படி நமக்கு பலன் கொடுக்கும்? வாசித்த வசனங்களை தியானத்திற்கு எடுத்துக்கொள்ளும்போது ஆவியானவர் உனக்குள் கிரியை செய்கிறார்.அதனால் உன் ஆத்துமா பெலன் அடைகிறது ஆத்துமாவானது தேவனை நோக்கி வாஞ்சிக்க வேண்டும் ஆத்துமாவின் கிரியைகளில் இதுவும் ஒன்று.

சங்கீதம் 42,43,69 இந்த அதிகாரத்தை தியானமாக எடுத்துக்கொள்ளும் போது, தாவீதின் ஆத்துமா எப்படி என்ன செய்கிறது என்று பார்க்கலாம். சங்கீதம் 69ல் 1-18 வரைக்கும் மனிதன் தன் ஆத்துமாவை காத்துக்கொள்ளாவிட்டால் அதனால் அவன் முற்றிலும் சேற்றில் அமிழ்ந்தவனாகிறான் வசனம்1, 18 இவ்விரண்டிலும் இதை காணலாம் அமிழ்ந்த ஆத்துமாவை அவனால் மீட்டுக்கொள்ள இயலாது.அதைமீட்டுஎடுத்துவிட நம்மை உண்டாக்கினவரின் உதவி இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.காரணம் எல்லா ஆத்துமாக்களின் சொந்தக்காரர் அவரே எசே.18.20.

இந்த அதிகாரத்தில் ஆத்துமாவின் இரட்சிப்புக்காக ஒரு மனுசன் தேவனை நோக்கி கதறுவதை காணக்கூடியதாக இருக்கிறது. வசனம் 3 ல் அவனுடைய ஆத்துமக்கண்கள் அந்த இரட்சிப்புக்காக காத்திருக்கிறது. இந்த இடத்தில் தாவீது தன் இருதயத்தில் இருந்ததை கர்த்தரிடத்தில் ஊற்றிவிட்டது என்னதான் பாரமானதும் வருத்தம்மிகுந்ததுமான நிலையானாலும் எல்லாவற்றையும் வெளிப்படையாக நம்முடைய உள்ளத்தில் உள்ளதை அப்படியே கொண்டு வந்து அவரிடம் சொல்லும்போது நம்முடைய உள்ளான மனுசன் அவரின் பெலத்தைப்பெற்று விடுதலை அடைகிறது.

அடுத்ததாக சங்கீதம் 42 ,43 அதிகாரத்தில் ஒன்றைப்பார்க்கலாம் என்னவென்றால் தாவீதின் அந்தவேளைகளில் தேவன் வெகுதொலைவில் இருப்பதாக தெரிகிறது தாவீதின் கதறல் தாகமுள்ள மானானது தண்ணீர் இன்றி பாலைவனத்தில் எப்படித்தவிக்கிறதோ அதே நிலையில் தாவீதின் ஆத்துமா தவிக்கிறது. அந்த மான் தண்ணீரை தேடுகிறது ஆனால் தண்ணீர் (கர்த்தர்) வெகுதொலைவில் இல்லை அவா ;(அந்தத்தண்ணீர்) அருகே இருக்கின்றார் ஆனால் அந்த மான் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை கர்த்தர் என்ன கூறுகிறார்?

நான் உன்னுடனே இருக்கிறேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக்கைவிடுவதுமில்லை. ஏசையா 41;.10 ,எபிரே.13.5 இந்த ஆத்துமா கலங்குவதற்கு ஒரு காரணம் வசனம் 3,9-10 மற்றவர்கள் பேசும் பேச்சுக்கு இடம் கொடுப்பதால் நம்முடைய ஆத்துமா பெலவீனப்பட்டு ஆவிதொய்ந்துபோகும் சில நேரம் தாவீதுக்கு கேட்கப்பட்டதுபோல் உன் தேவன் எங்கே ? என்று கேட்பார்கள் அதற்கு உன்னுடைய பதில் என்ன? உன்னையே நீ கேட்டுப்பார், அவர் எந்த நேரத்திலும் உன்னுடைய எந்த தேவையிலும் அவர் உன்னுடனே கூட இருக்கிறார் என்பதை மறந்து விட்டால் இப்படியான கேள்விக்கு நீ குழப்பம் அடைவாய்.

நீ கர்த்தரோடு இருந்தால் அவர் உன்னோடு இருப்பார். 2நாளா.15;:2

நீ தேவனுடைய சத்தத்திற்கு மாத்திரம் செவி கொடுப்பாய் என்றால் உன்னை எந்த தீமையும் அணுகாது.அதை விட்டு மனிதசத்தத்திற்கு செவி கொடுப்பதால் உன்னையே நீ கெடுத்துகொள்ளுதல் ஆகும். உள்ளான மனுசன் தொய்ந்து போகும்போது உன்னை ஆட்கொள்வது எது? அப்போது நீ என்ன செய்வாய்? உன்னை வழிநடத்த யாருக்கு ஒப்புக்கொடுக்கின்றாயோ அதுவே உன்னை வழி நடத்தும்,மாம்சத்திற்கா,ஆவிக்கா மாம்சம் என்றால் அது உன்னை மேற்கொண்டு வழி நடத்தி அதனால் உன் மேல் வரும் துன்பம், இச்சை அளவில்லாமல் இருக்கும் இதன் முடிவோ அழிவு. ஆவிக்கென்று உன்னை ஒப்புக்கொடுப்பாயென்றால் ஆவியானது நித்தியமான செம்மையான பாதையில் உன்னை நடத்தும். நீ நடக்கும் பாதையில் எத்தனை கரடு முரடானதும் கோணலானதுமாக இருந்தாலும் தேவன் தாமே கோணலானவைகளை நேராக்கி உன்னை நடப்பிப்பார் அதன் முடிவோ நித்தியஆனந்தம் நித்தியவாழ்வு.

மற்றவர்கள் பேசும் பேச்சினால் உன் ஆத்துமா கலங்கிப்போக இடம் கொடாதே, தேவனையே நோக்கி காத்திரு அத்துடன் பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நோக்கிப்பார் அப்போது பிழைப்பாய். பலசந்தர்ப்பம் சூழ்நிலைகளில் நீ தொய்ந்து போகும் நேரத்தில் உன் மனதில் ஒன்றை வைத்துக்கொள் இவைகள் எல்லாம் அவருடைய அவருடைய அலைகள், திரைகள் அவருக்கு தெரியும் உனக்கு எது நல்லது என்று இந்தநேரத்தில் உன்னுடைய உணர்வுகளையும், துயரத்தையும் உணவாக்கிக்கொள்ளாமல் தேவனுடைய வார்த்தையை உண்ணுவதற்கு முற்படுவாயாகில் உன்னுடைய ஆத்துமா எந்தசந்தர்ப்பங்களிலும் பலம் இழந்து நிற்காது. ஆத்துமா தொய்ந்து போகும் வேளையில் மண்ணான மாம்ச சரீரத்தின் இச்சைகள் நம்மை மேற்கொள்ளும் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு அவருடைய வசனம் தேவை அதுவே உயிர்ப்பிக்கக்கூடியது.

சங்கீதம் 119:25 என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும் .

ஆத்துமாவானது ஆவிக்குரிய உணவினால் போஷிக்கப்பட்டு திருப்தியாக்கப்பட்டால் அது எப்போதும் தேவனையே தியானித்துக்கொண்டிருக்கும் மற்றவர்களுடன் பேசும்பேச்சுக்களில் கனிவு இருக்கும் அதனால்தான் தாவீது இப்படிக்கூறுகிறது

நிணத்தையும் கொளுப்பையும் உண்டது போல் என் ஆத்துமா திருப்தியாகும் என் வாய் ஆனந்த களிப்புள்ள உதடுகளால் உம்மைப்போற்றும் என் படுக்கையின் மேல் நான் உம்மை நினைக்கும் போது இராச்சாமங்களில் உம்மைத்தியானிக்கிறேன். சங்கீதம்63:4-5

ஆகவே வேதவசனத்தை உணவாக்கி,தியானம் செய்து தேவசித்தத்தை அறிந்து அவருக்கு பிரியமான பிள்ளையாக தேவஆவியின் வழிநடத்துதலுக்கு உட்படுத்தி வாழும் போது தேவ ஆசீர்வாதம் நமது வாழ்வில் நிலைத்து நிற்கும் ;

கர்த்தாவே உம்முடைய நியாயத்தீர்ப்புக்களின் வழியிலே உமக்குக்காத்திருக்கிறோம். உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்துமவாஞ்சையாயிருக்கிறது. என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது, எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத்தேடுகிறேன், உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள

எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். அப்.10:35

கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமேன் தேவன் தாமே உங்களனைவரயும் ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.

ஆமென்.கர்த்தராகிய இயேசுவே வாரும்.

Light of the World

Light of the WorldLight of the World
I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life. Jn.8:12
Add ChurchAdd Church
Churches in your area, Add a Church Location or Search for one near you.