The Largest Tamil Christian's Global Network

 

Coming Soon!

 

Coming Soon!

 

Coming Soon!

  • Welcome to TamilChristian.com
  • Freely you have received, freely give. Matthew 10:8
  • ,ytrkha;g; ngw;wPh;fs;> ,ytrkha;f; nfhLq;fs;. kj;NjA 10:8


கிறிஸ்துவின் சபை

இந்தியா-இலங்கை கிறிஸ்தவ மார்க்கத்தை ஏற்றுக்கொண்டால் எந்தவகைத் திருச்சபைப் பிரிவைச் சேரும் ?

உலகத்தில் எந்த தேசத்தையுமே முழமையான கிறிஸ்தவ தேசம் என்று நம்மால் கூறமுடியாது. மேல் நாடுகள் இன்று தழுவியிருப்பதைப் போல இந்தியாவும் - இலங்கையும் ஒரு வேளை கிறிஸ்தவ மார்க்கத்தை வருங்காலத்தில் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், உலகம் நிலைத்திருக்கும்வரை அதில் நல்லதும் கெட்டதும் கலந்தேயிருக்கும். உலகத்தாரனைவருடைய உள்ளமும் வாழ்வும் மாறினாலொழிய கிறிஸ்துவின் ஆளுகை வந்துவிட்டதாக நாம் கருதமுடியாது. அவ்வாறு மாறிவிட்டாலோ உலகம் உலகமாக இருக்காது. சொர்க்கமாக மாறிவிடும்!. இன்று திருச்சபைகளில் ஆராதனை முறைகளிலும் மக்கள் அடிக்கடி மாறுதலைப் புகுத்தி வருகிறார்கள். புதுப் புதுப் பிரிவுகளை உண்டு பண்ணியும் வருகிறார்கள். ஆனால், இவற்றில் எதனாலும் அவர்கள் திருப்தியடைந்துவி;டப் போவதில்லை. புதிய பகுதிகளை உருவாக்குவதில் நமது தேவைகள் திருப்தியடையமாட்டா. ஜீவனுள்ள கிறிஸ்து ஒருவரில் தான் நம் குறைகள் யாவும் தீர்க்கப்பெறும். அவரிலிருக்கும் ஜீவத் தண்ணீரின் நதி நமக்குள் பாய்ந்து நம்மைச் செழிப்பிக்கவேண்டும்.

இமயமா மலையிலிருந்து வற்றாத ஆறு பொங்கிப் புரண்டோடி வருகையில் அதற்குக் கால்வாய்கள் வெட்டி அதன் பாதையைத் திருப்ப யாரும் முயற்சிப்பதில்லை. நெடுஞ்சிகரங்கள்மீதும் பருங்குன்றுகள் மீதும் குதித்துக் குமிழியிட்டுச் செல்லும் அந்நதி, பள்ளத்தாக்குகளிலும் மலைப்பிளவுகளிலும் தன்விருப்பப்படி பாய்ந்து வருகிறது. ஆனால் சமவெளியை அது வந்தடைந்தவுடன் மக்கள் அதற்குக் கால்வாய்கள் வெட்டிப் பல இடங்களுக்கும் அதன் நீரைப் பாய்ச்சுகிறார்கள். ஆதேபோல கிறிஸ்துவிடமிருந்து புறப்பட்டுவரும் ஜீவ நதி முதலில் தனிப்பட்ட கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் பாய்ந்து அவர்களை உய்விக்கிறது. ஆதற்குக் கால்வாய்கள் அமைப்பதன் அவசியத்தை அவர்கள் உணருவதில்லை. ஆனால், முழுச்சமூகத்தின்மீதும் அந்நதி பாயும்போது அவர்கள் அதற்குச் சபைகள் என்னும் கால்வாய்கள் நிறுவக்கூடும். ஆனால், அத்தகைய காலம் உண்மையிலேயே வரும்போது மனிதனால் உண்டாக்கப்பட்ட சபைப் பிரிவுகள் மறைந்துபோகும். ஜீவனுள்ள கிறிஸ்துவின் ஒரே திருச்சபை மட்டுமே நிலைத்திருக்கும். ' ஓரே மந்தையும் ஒரே மேய்ப்பனும் ' தான் இருப்பார்கள்.

---அவைகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். யோவான் 10:16

Light of the World

Light of the WorldLight of the World
I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life. Jn.8:12
Add ChurchAdd Church
Churches in your area, Add a Church Location or Search for one near you.