The Largest Tamil Christian's Global Network

 

Coming Soon!

 

Coming Soon!

 

Coming Soon!

  • Welcome to TamilChristian.com
  • Freely you have received, freely give. Matthew 10:8
  • ,ytrkha;g; ngw;wPh;fs;> ,ytrkha;f; nfhLq;fs;. kj;NjA 10:8


விசுவாசிகளின் பாதை

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!

பிரியமான பிள்ளையும்,தேவனைப் பின்பற்றுகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவை கவனித்துப்; பாருங்கள்! தேவனைப் பின்பற்றுகிறவன் என்றால் தேவனுடைய சீடர்கள் என்று பொருள். தேவனுடைய சீடர்கள் தேவனுக்குப் பிரியமானவர்கள் இவர்கள் அன்பிலே பரிபூரணப்பட்டவர்கள். ஏன் என்றால் தேவனிடத்தில் தம்மை ஒப்புக்கொடுத்தவர்கள், அதிலும் சுகந்தவாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்தவர்கள். நாம் அன்பிலே நடப்போமானால் நாம் நம்மை தேவனுக்கென்று ஒப்புக்கொடுத்திருக்கிறோம், தேவனுக்கென்று முற்றுமாக ஒப்புக்கொடுத்தவன் அன்பிலே நிலை கொண்டு நடப்பான் இவனது வாழ்க்கை தேவனுக்கேற்ற வாழ்க்கையாக அமையும்,வாழ்வில் தேவசித்தம் காணப்படும். இயேசு கிறிஸ்து காணிக்கையாகவும்,பலியாகவும் தம்மை எப்படித் தேவனுக்கென்று ஒப்பக்கொடுத்தார்?

எபிரேயர்10:5-9 .....பலியையும் காணிக்கையும் நீர் விரும்பாமல் ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்படுத்தினீர்.

ஏன் இந்த சரீரம்?

வசனம்7,8 தேவனுடைய சித்தம் செய்வதற்கு, எது தேவசித்தம்?

தேவசித்தம், தேவனுக்குபிரியமானதைச் செய்வது சங்கீதம்40:8 இந்தப் பலியைத் தேவன் விரும்புகிறார். தேவனுக்குப் பிரியமானதை இயேசுகிறிஸ்து செய்வதற்கு பிதாவின் ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார். பரிசுத்த ஆவியினால் நாமும் நிறைந்திருந்தாலேயன்றி நம்மாலே தேவனுக்குப் பிரியமானதைச் செய்ய இயலாது. தேவனுக்கு பிரியமானதைச் செய்வதே அவர் ஏற்றுக் கொள்ளும் காணிக்கையும்,பலியுமாகும் இதை அவர் சுகந்த வாசனையாக ஏற்றுக் கொள்வார். நாம் தேவனுக்குப் பிரியமாயிராமல் காணிக்கையையும்,பலியையும் செலுத்துவோமானால் அதை அவர் ஏற்றுக் கொள்ளார்.

உதாரணமாக வேதாகமத்தில் இரண்டு சம்பவம்:

(1) ஆதியாகமம் 4 ல் ஆபேல், காயீன் காணிக்கை

(2) 1 சாமுவேல் 15:22 சவுலின் காணிக்கை கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ?

செவி கொடுத்தலே உத்தமம். சங்.40:6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத்திறந்தீர்... ஏன் செவிகளைத்திறந்தீர்? செவிகொடுப்பதற்கு, தேவ சத்தத்திற்கு செவி கொடுத்து கீழ்ப்படியும் போது தேவ ஆவியானவர் நமக்குள் கிரியை செய்கின்றார். அப்.5:32 தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவி.....

கீழ்ப்படிகிறவர்களுக்கு தேவன் பரிசுத் ஆவியைத் தந்தருளுகிறார். அதே நேரத்தில், 1பேதுரு 1:22 ஆவியினாலே சத்தியத்திற்கு கீழ்ப்படிந்து.. நாம் தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிவதற்கு பரிசுத்த ஆவி எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது. அவர் கிரியை செய்யும் போதுதான் நாம் தேவனுக்கேற்றவர்களாக முடியும். நாம் வேதம் வாசிக்கிறோம் ஆனால் வாசித்த வேதத்திற்கு கீழ்ப்படிகிறோமா? என்பதுதான் முக்கியமானது.

கீழ்ப்படியாதவர்களிடத்தில் கிரியை செய்வது அந்தகாரத்தின் ஆவி எபேசி.2:2 இவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்கள் அல்ல. தேவ கோபாக்கினை இவர்கள் மேல் வரும்.

தேவனுக்குப் பிரியமான பிள்ளைகள் நாம் என்றால் அவருடைய சித்தம் அறிந்து பிரியமானதைச் செய்வோம். அவருக்குப் பிரியமான பலிகள்:

சங்.141:2 நாம் ஏறெடுக்கும் விண்ணப்பம் (ஜெபம்) நமது கையெடுப்பு (இருதயத்தை அவருக்கு நேராக ஏறெடுப்பது)

1பேதுரு 2:5 இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துதல்.

சங்.51:19 தகனபலியும், சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்.

இயேசு கிறிஸ்து தம்மைத் தேவனுக்கு சுகந்த வாசனையான காணிக்கையாகவும், பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்தது போல நீங்களும் அன்பிலே நடந்து கொள்ளுங்கள்

இயேசு கிறிஸ்து நம்மில் எப்படி அன்புகூர்ந்தார்?

தேவனுக்கு சுகந்த வாசனையான காணிக்கையாகவும், பலியாகவும் ஒப்புக்கொடுத்து, இதன் மூலமாக நம்மில் அன்புகூர்ந்தார். நாமும் அன்புள்ளவர்களானால் மற்றவர்களுக்காக நம்மை தேவனுக்குக் காணிக்கையாகவும், பலியாகவும் ஒப்புக் கொடுக்க வேண்டும். (மற்றவர்கள் செய்யும் அநியாயத்திற்கும், அவர்கள் தேவனுக்குப் பிரியமல்லாததை செய்யும் போதும் அவர்களுக்குத் துணை நிற்பதை குறிக்காது.)

இயேசு சொன்னார்:

'நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்' என்று உப்பு சாரமுள்ள ஒரு பொருளாகும். எப்படி இது சாரமுள்ளதாக மாறுகிறது? உப்பு சாரமுள்ளதாக மாறும் போது ருசி அல்லாதவற்றையும் ருசியுள்ளதாக மாற்றுகிறது. உப்பு உப்பாக இருக்குமேயானால் உப்பின் ருசியை எப்படி அறிந்து கொள்ளலாம்? சமையல் செய்யும் போது உப்புக் கல்லை எடுத்து பாத்திரத்தில் போட்டவுடன் அது வேகப்பட்டு உருகி தனக்குள் இருந்த சாரத்தை உணவிற்குக் கொடுக்கிறது உணவு ருசியாக மாறுகிறது. இப்போ உப்பு உருவமற்றதாக மாறிவிட்டது. உப்பை காணமுடியாது ஆனால் அதை காண வேண்டுமானால் உணவின் ருசியினால் நாம் அதின் சாரத்தை உணரக்கூடியவர்களாகிறோம். உப்பு அது உருகாமல் கல்லாகவே இருக்குமானால் எப்படி அது சாரத்தை கொடுக்கும்? அது உருகும் போதுதான் சாரத்தை கொடுக்கிறது. நாம் அன்புள்ளவர்களானால் அந்த அன்பு சாரம் உள்ளதாக்கப்படவேண்டும், சாரமாக்கப்படுவதற்கு அது உருகவேண்டும் உருகவைக்க நம்மால் முடியாது. அதற்கு பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்யும் போது உப்பான அன்பு தானாக கரையும். உப்பின் சாரத்தை உணவு எப்படிப் பெற்றுக் கொண்டதோ அதேபோல், நமக்குள் இருக்கும் தேவசாயலான அன்பை மற்றவர்களும் பெற்றுக் கொள்ள முடியும்.

தேவனுடைய சாயலை யாரும் கண்டதில்லை, ஆனால் வேதாகமத்தில் தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று எழுதியிருக்கிறது

அந்த அன்பின் சாயலை நாமும் அணிந்து கொள்ள இயேசு கிறிஸ்து நமக்கு காட்டின பாதையை பின் தொடர்ந்து செல்வோம்.

கர்த்தருக்கே மகிமை!கர்த்தர் உங்களனைவரையும் ஆசீர்வதிக்க தேவ சித்தம் செய்வீர்களாக.

எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். அப்.10:35

கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமேன்

தேவன் தாமே உங்களனைவரயும் ஆசீர்வதித்து வழி நடத்துவாராக. ஆமென்.கர்த்தராகிய இயேசுவே வாரும்.

Light of the World

Light of the WorldLight of the World
I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life. Jn.8:12
Add ChurchAdd Church
Churches in your area, Add a Church Location or Search for one near you.